மரபுத்தொடரும் அதன் பொருளும் Question Preview (ID: 53804)


ஆண்டு 3 மரபுத்தொடர். TEACHERS: click here for quick copy question ID numbers.

அள்ளி இறைத்தல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
a) அளவுக்கு மீறி செலவழித்தல்
b) தேவையானவற்றிற்குச் செலவு செய்வது
c) எல்லாவற்றை எடுத்து கொட்டுதல்
d) நகைகளை வாங்குதல்

ஆறப் போடுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
a) உணவு பொருட்களை ஆற வைத்தல்
b) ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்
c) வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்தல் D.
d) ஒன்றை எடுத்து வைத்தல்

அரக்கப் பரக்க எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
a) சுயமாக வேலைகளைச் செய்தல்
b) ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்
c) வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்தல்
d) அவசரமும் பதற்றமும்

கம்பி நீட்டுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
a) பிறருக்குத் தெரிந்து ஒன்றைச் செய்தல்
b) கம்பியை எடுத்து காட்டுதல்
c) பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
d) பிறர் அனுமதியுடன் செல்லுதல்

அள்ளி விடுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
a) ஒருவரிடம் உண்மையைக் கூறுதல்
b) ஒன்றை அழகுப்படுத்தி கூறுதல்
c) ஒன்றை மிகைப்படுத்தி செய்தல்
d) ஒன்றை மிகைப்படுத்தி கூறுதல்

ஏட்டுச் சுரக்காய் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
a) நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
b) ஒரு வகை காய்கறி
c) மனித வளர்ச்சி
d) இக்கால கல்வி அறிவு

காலையில் தாமதமாக எழுந்த தமயந்தி, பள்ளிக்கு __________________ தயாராகினாள்.
a) அள்ளி இறைத்தல்
b) அரக்கப் பரக்க
c) ஆறப் போடுதல்
d) கம்பி நீட்டுதல்

ஆசிரியர் கொடுத்த இடுபணியைக் கவிதா காலந்தாழ்த்திச் செய்ததால் அவளுக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
a) அரக்கப் பரக்க
b) அள்ளி இறைத்தல்
c) ஆறப் போடுதல்
d) ஏட்டுச் சுரக்காய்

தர்மன் தான் வேலை செய்த நகைக் கடையில் உள்ள நகைகளைத் திருடிக்கொண்டு தப்பித்து ஓடினான்.
a) அள்ளி இறைத்தல்
b) அரக்கப் பரக்க
c) ஆறப் போடுதல்
d) கம்பி நீட்டுதல்

செல்வி எதையும் மிகைப்படுத்தி பேசுவதால் அனைவரும் அவளைக் கேலி செய்தனர்.
a) அள்ளி விடுதல்
b) அரக்கப் பரக்க
c) ஆறப் போடுதல்
d) ஏட்டுச் சுரக்காய்

தன் சம்பளத்தை அளவுக்கு மேல் செலவு செய்த ரவிந்திரன் இப்போது சிரமப்படுகிறார்.
a) அள்ளி விடுதல்
b) கம்பி நீட்டுதல்
c) அள்ளி இறைத்தல்
d) ஏட்டுச் சுரக்காய்

Play Games with the Questions above at ReviewGameZone.com
To play games using the questions from above, visit ReviewGameZone.com and enter game ID number: 53804 in the upper right hand corner or click here.

TEACHERS / EDUCATORS
Log In
| Sign Up / Register