ஆண்டு 6 Question Preview (ID: 41446)


உவமைத்தொடர். TEACHERS: click here for quick copy question ID numbers.

1. பத்து வருடம் கழித்து முகிலன் பட்டப் பணக் கஷ்டம் ____________________________ மறைந்தது. மேற்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
a) அனலில் இட்ட மெழுகு போல
b) கண்ணினைக் காக்கும் இமை போல
c) இலைமறை காய் போல
d) சூரியனைக் கண்ட பனி போல

2. ____________________ போர்த்திய ___________ போல எனும் உவமைத்தொடரில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க
a) புலித்தோல், பசு
b) பசுத்தோல், புலி
c) புலி, கரடி
d) கரடித்தோல், பசு

3. துன்பம் நீங்குதல் எனும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
a) கண்ணினைக் காக்கும் போல
b) சேற்றில் முளைத்த செந்தாமரை போல
c) சூரியனைக் கண்ட பனி போல
d) தாயும் சேயும் போல

4. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
a) ஒரு பொருள் சேதமடைவது தடுக்க முடியாமை பாதிப்பு ஏற்படுவது உறுதி.
b) சேதமடையும் பொருளைப் பாதுகாத்தல்.
c) சேதமடைந்த பொருளின் மீது துன்பப்படுதல்
d) சேதமடைந்த பொருளை மறைத்து வைத்தல்

5. குழந்தை கையில் முக்கியமான கடிதத்தைக் கொடுத்ததும் யானை வாயில் அகபட்ட கரும்பு போல அக்குழந்தை அதனைச் சேதாரமாக்கியது. மேற்காணும் வாக்கியத்தில் உவமைத்தொடரை விளக்கும் சொல் யாது?
a) குழந்தை
b) கடிதத்தை
c) சேதாரமாக்கியது
d) முக்கியமான

6. பசுத்தோல் போர்த்திய புலி போல எனும் உவமைத்தொடரின் பொருளை தெரிவு செய்க.
a) நல்லவனாக இருத்தல்
b) பண்புடையவன்.
c) நல்லவனாக மறைந்திருப்பவன்
d) நல்லவன் போல் நடிக்கும் தீயகுணம் உள்ளவன்.

7. கீழ்காணும் வாக்கியங்கள் எது உவமைத்தொடருக்கு ஏற்ற பொருள் விளங்கியள்ளது?
a) தக்க சமயத்தில் குமணனுக்கு வேலை கிடைத்ததால் சூரியனைக் கண்ட பனி போல அவனின் குடும்பக் கஷ்டம் நீங்கியது.
b) கோபால் பசுத்தோள் போர்த்திய புலி போல நடந்து கொண்டான்.
c) கிருபன் யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல இருந்தான்.
d) ரோஜா கனவு சூரியனைக் கண்ட பனி போல மறைந்தது.

8. கணேசன் பசுத்தோல் போர்த்திய புலி போல நல்லவன் போல் நடித்து அனைவரையும் ஏமாற்றினான். மேற்காணும் வாக்கியத்தில் உள்ள குறிப்புச் சொல்லைத் தெரிவு செய்க.
a) ஏமாற்றினான்
b) நல்லவன் போல் நடித்து ஏமாற்றினான்.
c) நல்லவன்
d) நடித்து

9. எது யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல எனும் உவமைத்தொடரைப் பயன்படுத்திப் பொருள் விளங்கும் வாக்கியம் அல்ல?
a) சீலன் தனது அதிகாரியிடம் யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல மாட்டிக் கொண்டு பாதிப்புக்குள்ளாகினான்.
b) மாலா யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல மாட்டிகொண்டாள்.
c) அவளின் சட்டையில் முள் பட்டு யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல கிழிந்து சேதாரமடைந்து விட்டது.
d) ஆடவன் யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல விபத்தில் சிக்கிக் காயமடைந்தான்

10. _____________________________ சூரியனைக் கண்ட பனி போல மக்களின் துன்பம் நீங்கியது. மேற்காணும் வாக்கிய்யத்திற்குப் பொருத்தமான சூழலைத் தெரிவு செய்க.
a) மகாத்மா காந்தியால் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தவுடன்
b) கண்ணன் வேலைக்குச் சென்று பணத்தைக் குடும்பத்திற்குக் கொடுக்காததால்
c) சாந்தி கடைக்குச் சென்றதால்
d) விளையாடிக் கொண்டிருந்ததால்.

Play Games with the Questions above at ReviewGameZone.com
To play games using the questions from above, visit ReviewGameZone.com and enter game ID number: 41446 in the upper right hand corner or click here.

TEACHERS / EDUCATORS
Log In
| Sign Up / Register